Tuesday, June 5, 2007

Thatcha Naayanaar Tamil Medical Dictionary - தட்சநாயனார் தொகுத்து அளித்த மருத்துவ அட்டவணை - "க" வரிசை

ககவசுகம் - ஆல்
ககனம் - துத்தநாகம்
கக்கார் - தேமா, கழற்கொடி, கெச்சக்காய்ச் செடி
கங்கு - கருந்தினை, தினை
கங்குஷம் - புங்கு
கசகம் - வெள்ளரி
கசகரிகம் - கக்கரி
கசங்கு - ஈந்து
கசமாது - ஊமத்தை
கசருகம் - கொள்ளு
கசற்பம் - மஞ்சள்
கசனசித்து - பெரும்புல்
கசேருகம் - தமரத்தை
கச்சகர் - கொள்ளு
கச்சி - சீந்தில், கருங்கேசம், வெண்கலம்
கச்சூரி - பன்றிமொத்தை
கச்சை - அபின்
கச்சோலம் - ஏலத்தோல், நெல்லிப்பருப்பு, பூலாங்கிழங்கு
கஞ்சங்குளத்தில் மணிப்பருப்பு - நெல்லிமுள்ளி
கஞ்சம் - வெண்தாமரை, அப்பம், துளசி, வெண்கலம், தாமரை, செம்பு
கஞ்சா - ஊரிக்கிட்டம், மனிதர் காஞ்சகட்டம்
கஞ்சாங்கோரை - நாய்த்துளசி
கஞ்சான் - கஞ்சாங்கோரை, புங்கு
கஞ்சுகம் - முருக்கு, சிலந்தி
கஞ்சுரம் - முருங்கை
கடஞ்சிகம் - குசப்புல்
கடஞ்சுடபீகம் - புல்
கடம்பம் - வாலுளுவை
கடம்பல் - குமிழ்மரம்
கடலகம் - ஊர்க்குருவி, ஆமணக்கு, ஆதளை
கடலம் - ஆமணக்கு
கடலாடி - நாயுருவி
கடல்கொடி - தும்பை, கவுதும்பை
கடவுளாதாரம் - தேவதாரம்
கடி - இரத்தம், மூக்கிரட்டை
கடிகண்டு - பூனைக்காலி
கடிச்சவாய்துடைச்சான்- எருக்கு
கடிப்பகை - சிறுகடுகு, கடுகு
கடியடு - சிற்றரத்தை
கடிலம் - மிதிபாகல்
கடிலா - மூக்கிரட்டை
கடு - நஞ்சு, கடுக்காய், கசப்பு
கடுகம் - கடுகரோகணி
கடுக்கை - கொன்றை, மருது
கடுசாரம் - கடுகுரோகணி
கடுப்படக்கி - எருமுட்டைப்பீநாரி
கடுப்பை - வெண்கடுகு
கடூடம் - மருக்காரை
கடேரியம் - மரமஞ்சள்
கட்டம் - கற்றாழை
கட்டுக்காய் - கடுகுரோகணி
கணை - மூங்கில், கரும்பு, திப்பிலி
கண்டங்கறை - நல்ல பாம்பு
கண்டந்திப்பிலி - திப்பிலி மூலம்
கண்டம் - கள்ளி, குன்றிவேர், பேய்க்கீரைவேர்
கண்டல் - வெண்ணெய், காட்டெருமைப்பால், தாழை, நீர்முள்ளி
கண்டி - சிறுகீரை
கண்டுகம் - மஞ்சிட்டி
கண்ணிகம் - மணத்தக்காளி
கத - செங்கோஷ்டம்
கதகம் - தேற்றான் விரை
கதகா - தேத்தாங்கொட்டை
கதகாதி - தேற்றான் விரை
கதம்பு - கடம்பு
கதலிகந்தம் - வாழைக்கிழங்கு
கதிரபயம் - கருங்காலிப்பிசின்
கதிரம் - கருங்காலி
கத்தரிநாயகம் - காட்டுச்சீர
கம்கத்திரி - காய்வேளை, கொளுஞ்சி
கத்திரிநாயகம் - ஆனைச்சீரகம்
கத்தேனி - மணித்தக்காளி
கந்தம் - கிழங்குவகை, கருணை, மணம்
கபம்பம் - வாலுழுவை
கபிதம் - கருஞ்சீரகம்
கபித்தம் - விளா
கபோதம் - சூரியகாந்தி
கமல் - குடசப்பாலை
கமனம் - கருஞ்சீரகம்
கமாதம் - மணத்தக்காளி
கயல் - தாமரை
கயிடிரிகம் - கருவேப்பிலை
கயிமவாதி - வசம்பு
கயிரவம் - வெள்ளாம்பால்
கரகம் - மாதளை
கரஞ்சம் - புங்கு
கரபகம் - மஞ்சள்
கரம்பை - சிறுகளா, களாச்செடி
கரவாகம் - காகம்
கரவாக்கிப்பூ - வெள்ளைக்காய்வேளை
கரவாடம் - வெட்பாலை
கரவீரம் - அலரி
கரழ் - பளிங்கு
கராமம் - வெண்கடம்பு
கரி - அத்தி
கரிக்கண்டு - கையாந்தகரை, கரிசலாங்கண்ணி
கரிக்கணை - யானைத்திப்பிலி
கரிக்கை - கையாந்தகரை
கரிக்கோலம் - அழிஞ்சில்
கரிசன்னி - வெள்ளைக்காக்கணம்
கரிச்சால் - கையந்தகரை
கரிச்சான் - கரிசலாங்கண்ணி, சிறுதேக்கு
கரிதூபம் - ஒட்டரை
கரிந்து - பொன்
கரிப்பான் - கையந்தகரை
கரியபோளம் - கற்றாழைப்பால், நறும்பிசின்
கரியமால் - துளசி, சிறுதுழாய்
கரிரம் - அகத்தி
கருங்கஞ்சனம் - வெண்கலம்
கருங்கொல் - இரும்பு, கருந்தாது
கருஞ்சுரை - சுரை
கருஞ்சூரை - செங்கத்தாரி
கருஞ்சேரன் - அகில்கட்டை
கருடம் - மருக்காரை
கருடன்கொடி - கொல்லன்கோவை, சீந்தில்
கருதரன் - தசவாயுவிலொன்று
கருந்தாது - இரும்பு
கருப்பை - காரெலி, எலி
கருமஞ்சரி - நாயுருவி
கருமயிர் - கரடி
கரும்பை - காடி
கரும்பொன் - இரும்பு
கருவிரதாரம் - கடுகுரோகணி
கருவேம்பு - கருவேப்பிலை
கருவை - வரகுவைக்கோல்
கரைவிரி - கம்பு
கலவகை - நால்வகச்சாந்து
கலவசம் - காக்கை
கலவை - சாந்து
கலாபூ - பீர்க்கு
கலாயம் - தயிர், வெட்பாலையரிசி
கலிங்கம் - வெட்பாலை
கலித்துருமம் - தான்றிக்காய்
கலியாணம் - பொன்
கலினி - திரிபலை, திப்பிலி
கலினை - மிளகு, கொள்ளு
கலுழன் - கருடன்
கலுளி - காட்டெருமை
கல்லாரம் - நீர்முள்ளி, மஞ்சள், செங்கழுநீர்க்கிழங்கு
கல்லிகை - நாகமல்லிகை
கல்லுணி - நத்தைச்சூரி
கல்லுருணி - குருவிச்சி, புல்லுருவி
கல்லுருவிவேர் - சிறுபூளைவேர்
கவடி - பலகறை
கவடு - கொம்பு
கவரி - எருமை
கவி - பூனைக்காலி, மந்தி
கவிகம் - குக்கில்
கவிந்தி - நாணுகம்
கவிரம் - அலரி
கவிரோகம் - பூனைக்காலி
கவிர் - முருக்கு
கவினம் - மோர்
கவுசி - கொன்றை
கவுசிங்கம் - குக்கில்
கவுந்தி - அரேணு
கம்கவை - எள்
கவையம் - காட்டெருமை
கவோதம் - புறாமுட்டி
கவ்வல் - தினையரிசி
கவ்வியம் - நவநீதம்
கழற்காய் - கழற்சிக்காய்
கழாய் - சிறுகீரை
கழாரம் - பாக்கு, கமுகு
கழுதைப்பால் - நஞ்சறுப்பான்
கழுனை - மாதளை
களகம் - எலி, சுண்ணாம்பு
களசுவேதம் - அதிவிடையம்
களதூதம் - வெள்ளி
களத்துயிர் - குளவி
களந்தின்றி - தான்றி
களந்தூரி - தான்றி
களப்பன்றி - பெருங்குமிழ்
களலை - சேத்துமம்
களாவகம் - சிறுகீரை
களிகம் - வாலுளுவை
களுக்காணி - அழிஞ்சி
களூசி - சீந்தில்
கறவிரடை - காட்டுக்கருணை
கறி - மிளகு
கறிமுள்ளி - கண்டங்கத்திரி
கற்கடகசிங்கி - கடுக்காய்ப்பூ
கற்கடகம் - நண்டு
கற்கடகனாளி - சந்திரன், பூளை
கற்கந்தம் - விட்ணுகரந்தை
கனகமூரம் - வெள்ளி
கனகரசம் - அரிதாரம்
கனசாரம் - கருப்பூரம்
கனசாரவள்ளி - கற்பூரவள்ளி
கனம் - காந்தம், முத்தக்காசு, கோரைக்கிழங்கு
கன்னல் - கரும்பு
கன்னவம் - சிறுகீரை
கன்னற்கட்டி - சருக்கரை
கன்னன்வேர் - கையாந்தகரை
கன்னா - தில்லை
கன்னி - காவிளை, கற்றாழை
கன்னிகாரம் - கோங்கு (மலைக்கோங்கு)
கன்னிகை - தாமரைக்கொட்டை
கன்னிறம் - இசங்கு

1 comment:

செவுந்தலிங்கன் said...

பாராட்ட வார்த்தைகள் இல்லை,,, நல்ல விடயங்களுக்கு வருகை குறைவாகத்தான் இருக்கும். அதற்காக உங்கள் பணியை ( ஆம், இது இறைவனால் உங்களைச் செய்ய வைக்கக் கூடிய பணிதான்) தயவு செய்து நிறுத்தாதீர்கள் ,பல அரிய. நான் அறிந்த வேறு பதிப்புகளில் இல்லாத பல சொற்கள் நிறைந்து உள்ளன, வாழ்க உம்பணி, மேலும் கூகிள் தேடலில் உங்கள் blog வருவதில்லை tagகளை முடிந்தால் மாற்றம் செய்யவும், நன்றி