Showing posts with label Medical Dictionary "கூ" வரிசை. Show all posts
Showing posts with label Medical Dictionary "கூ" வரிசை. Show all posts

Tuesday, July 31, 2007

Thatcha Naayanaar Tamil Medical Dictionary - தட்சநாயனார் தொகுத்து அளித்த மருத்துவ அட்டவணை - "கூ" வரிசை

கூகை - ஆந்தை, கோட்டான்
கூகை நீறு - காட்டெருமைப்பால்
கூச்சம் - தருப்பைப்புல்
கூச்சி - சவரிலோத்திரம்
கூச்சிதம் - கடம்பு
கூச்சிரம் - கடம்பு
கூடம் - எள், குறுஎள்
கூடம்பில் - சுரை
கூடாரம் - பெருங்காயம்
கூதளம் - தூதுளை, வெள்ளரி
கூத்தங்குதம்பை - கொப்பு, நரிப்புட்டை, மூக்கொற்றிப்பூண்டு
கூந்தல் - கமுகு, புல், மயிர்
கூப்பை - மொட்டுவம்
கூம்பல் - குமிழமரம்
கூரம் - கோடகசாலை, பாகல்
கூர்கேவு - கடுகு, வெண்கடுகு
கூர்மம் - ஆமை
கூர்மன் - தசவாயுவிலொன்று
கூலம் - காராமணி, பாகல்
கூவிரம் - கூவிளை, வில்வம்
கூவிளம் - வில்வம், வில்வபத்திரி
கூழை - பாம்பு
கூழ்ப்பாண்டத்திலை - கூண்டு, தண்பூசினியிலை
கூழ்ப்பாண்டம் - பூசனிக்காய்
கூளப்பம் - இரும்பு, பாம்பு
கூனல் - சங்கு, நத்தை
கூனன் - சங்கு, நத்தை, ஆமை
கூனன்முதுகு - ஆமைஓடு
கூஷ்மாண்டம் - கலியாணபூசனி