Tuesday, February 20, 2007

Herbal of the day - இன்று ஒரு மூலிகை - அகில்


அகில்
வேறு பெயர்கள்:
அகரு, அகருகட்டை, அகிற்கட்டை, பூழில், காகதுண்டம்.
இது பெரிய மர வகுப்பைச் சேர்ந்தது. இஃது இமயத்தின் கீழ்நாடு, அஸ்ஸாம், பூட்டான், மற்றும் தெற்குப் பகுதிகளில் வளர்கின்றது.
பயன்படும் உறுப்புகள்:
கட்டை, பிசின்.

சுவை:
கார்ப்பு, கைப்பு, சிறு இனிப்பு.

தன்மை:
வெப்பம்

பிரிவு:
இனிப்பு

செய்கை:
வெப்பமுண்டக்கி
பித்தநீர்பெருக்கி
வீக்கமுருக்கி
குணம்:
நாசி யடைப்பு நவிரவிடி தாளுநோய்
வீசு நமைப்புடகள் விட்டேகும்-பேசில்
சுகரு மயங்குந் துணைமுலையாய்!-நல்ல
அரு மரத்தா லறி.
-அகத்தியர் குணவாகடம்

தளர்ந்த விருத்தருக்காந் தக்க மணத்தால்
உளந்த சுரமனைத்து மோடும்-வளர்ந்திழும்
மானே! அகிற்புகக்கு வாந்திய ரோசகம்போம்
தானே தளர்ச்சியுறுஞ் சாற்று.

-அகத்தியர் குணவாகடம்


பொருள்:
அகருக் கட்டையினால் மூக்கடைப்பு, தலைகுத்து, வாதம், நமைப்புடைகள், சிற்சில சுரம், வாந்தி, அருசி, அயர்வு, ஆகிய இவைகள் நீங்கும். தளர்ந்த உடல் இறுகும்.

மேலும்,
அகிற்கட்டையை நீர் விட்டுச் சந்தனம் போலரைத்து, உடலில் பூசிக்கொண்டுவர, தளர்ந்த உடல் இறுகும்.
இதன் புகை மணத்தால் சிற்சில சுரவெப்பம் நீங்கும்.

அகில் கட்டையைப் புகைத்து முகரினும், அல்லது இக் கட்டையின் புகை மேல் படும்படி செய்யினும், அயர்ச்சி, வாந்தி, சுவையின்மை தீரும். இதைப் புண்களுக்கும் புகைக்கலாம்.

இக் கட்டையாலாக்கிய தூள் ஆண்மைப் பெருக்கத்துக்காக செய்யப்படும் சில மருந்துகளில் சேருகிறது.

அகிற்கட்டைத் தைலத்தை முடித்தைலமாகப் பயன்படுத்த, நீர்க்கோவை, மேகம், மூக்கடைப்பு முதலிய நோய்கள் நீங்கும்.

அகிற்கட்டைத் தைலம்:
அகிற்கட்டைக் குடிநீர், நல்லெண்ணெய், பசுவின்பால் வகைக்கு 1.3 லிட்டர் எடுத்து ஒன்று கூட்டி அத்துடன் அதிமதுரம், தான்றிக்காய்த்தோல் வகைக்கு 35 கிராம் எடுத்து பசுவின் பால் விட்டரைத்துக் கலந்து, எரித்துப் தைலம் பதத்தில் வடித்தெடுத்துக்கொள்ளவும்.

Saturday, February 17, 2007

Herbal of the day - இன்று ஒரு மூலிகை - அகத்தி


Please note:
This Blog using unicode Tamil. So Win 9x Operating systems may not support. Upgrade your PC to WinXP or get technical assitance from your PC vendor.

அகத்தி (ஆதாரம்-சித்த மருத்துவம்-மூலிகை வகுப்பு)
வேறு பெயர்கள்: அச்சம், முனி, கரீரம்

புற அமைப்பியல்
இது, இந்தியாவில் எங்கும் தோட்டங்களில் பயிராய் வளர்க்கப்படும் செடி வகுப்பைச் சேர்ந்த தாவரமாகும். அகத்தி மரம்போல் 20 முதல் 30 அடி உயரம் வரை வளரும். பெரும்பான்மையாக வெற்றிலைக் கொடிக்கால்களிலும், நீர் தங்கிய பூமியிலும் பயிர் செய்யப்படுகிறது. தை மாதம் முதல் மாசி மாதம் வரையில் பூக்கும்.

அகத்தி இரண்டு வகைப்படும்.

1. அகத்தி - வெள்ளைப் பூ உடையது
2. செவ்வகத்தி - செந்நிறப் பூ உடையது

மருந்தாகப் பயன்படும் உறுப்புகள்(Part used as Drugs)

இலை(Leaf)
பூ(Flower)
பட்டை(Bark),
வேர்(Root).

சித்த மருத்துவக் கூறுபாடுகள் (All parts)
சுவை : சிறு கைப்பு
தன்மை : தட்பம்
பிரிவு : கார்ப்பு

செய்கைகள்:(Actions)
இலை(leaf)
நச்சரி-Antidote
குளிர்ச்சியுண்டாக்கி-Refrigerant
மலமிளக்கி-Laxative
புழுக்கொல்லி-Vermifuge

வேர்ப்பட்டை(Root bark)
துவர்ப்பி-Astringent)
உரமாக்கி - Tonic

அகத்தி இலையின் பண்பு (Characters of Leaf)


மருந்திடுதல் போகுங்காண் வங்கிரந்தி வாய்வாம்
திருந்த அசனம் செரிக்கும்-வருந்தச்
சகத்திலெழு பித்தமது சாந்தியாம் நாளும்
அகத்தியிலை தின்னு மவர்க்கு.

- அகத்தியர் குணவாகடம்.

பொருள் (Meaning):

இடுமருந்தின் தோடத்தை நீக்கும். உடலில் உண்டாகும் பித்தத்தை தணிக்கும். உணவைச் செரிப்பிக்கும். கடுவனையும், வாயுவையும் உண்டாக்கும்.

வழக்கில் பயன்படுத்தும் முறை:

இக்கீரை இடுமருந்தை முரிப்பதுபோல் மற்ற மருந்துகளின் செய்கையையும் கெடுக்கும். எனவே நோயாளிகளுக்கு மருந்து கொடுக்கும் காலங்களில் இந்தக் கீரையை நீக்க வேண்டும். சாதாரணமாக நாள்தோறும் உணவாக உட்கொள்ளாமல், வேண்டும்பொழுது மட்டும் இதைக் கறியாகச் சமத்துண்ண, அகத்தியர் குணவாகடம் நூலில் கூறப்பட்ட நற்குணங்களைக் கொடுக்கும். வயிற்றுப்புழு நீங்கும்.

மேலும்,
1. கீரையின் சாற்றைப் பிழிந்து மூக்கில் ஒன்று இரண்டு துளிவிட நான்காம்முறைக் காச்சல் விலகும்.
2. கீரையின் சாற்றைத் தலையில் பூசித் தலைமுழுக, வெறி நீங்கும்.
3. சாறு ஒரு பங்கு, தேன் ஐந்து பங்கு கூட்டி, நன்றாய் உறவுபடக்கலந்து உச்சியில் விரலால் தடவ குழந்தைகளுக்குக் காணும் நீர்க்கோவைப் போகும்.
4. சாற்றை இரண்டு துளி மூக்கில் விட நீர்க்கோவை, தலைவலி நீங்கும்.
5. இலையை அரைத்துக் கற்கமாகஸ் செய்து காயங்களுக்கு வைத்துக் கட்டலாம்.

அகத்திப் பூவின் குணம்

புகைப்பித்த மும்மழலாற் பூரிக்கும் அந்த
வகைப்பித்த மும்மனலும் மாறும்-பகுத்துச்
சகத்தி லருந்தாத் தனியமிர்தே! நாளும்
அகத்தி மலருக் கறி.




- அகத்தியர் குணவாகடம்.


பொருள்:
பூவைச் சமத்துண்ண வெயிலினாலும், புகையிலை, புகப்பிடித்தல் போன்ற பழக்கங்களாலும் பிறந்த பித்தக்குற்றம், உடலில் தோன்றும் வெப்பு தணியும்.


செவ்வகத்தி இலையின் குணம்:

செவ்வகத்திப் பன்னஞ் சிலேத்மமதை யுண்டாக்கும்
வவ்வுபல சிந்தூரம் வைப்பதற்காம்-கவ்வு
நவநீத பற்பமதை நாளுமுடிப் பிக்குஞ்
சிவமாக்குந் தாளகத்தைத் தேர்.


- அகத்தியர் குணவாகடம்.
பொருள்:
பல செந்தூரங்கள் செய்யவும், நவநீத பற்பம், தாளகசுத்தி செய்யவும் பயன்படும். இது ஐயத்தை உண்டாக்கும்.
செவ்வகத்திக் கீரையை சமைத்துண்ண ஐயப்பெருக்கை உண்டாக்கும், இலைச்சாறு மான்கொம்பை சுத்திச்செய்யும்.-(தேரையர் கரிசல்)
செவ்வகத்திப் பூவின் குணம்
நாடிற் பனிப்பீனும் நாசிக் கறைக்கதழ்வை
யோடித் துடைத்துள் ளொளியாற்றும்-பாடெத்
தவரகத்தி னுந்துணங்கைத் தண்டா மயிலே!
துவரகத்திப் பூக்காண் டுதி.
- அகத்தியர் குணவாகடம்.
பொருள்:
இது பார்ப்பதற்குப் பயத்தை விளைவிக்குமாறு மூக்கின் வழியாக விழுகிற இரத்தப் பெருக்கை விரைவில் நிறுத்துவது மட்டுமின்றி உடல் வெப்பத்தையும் போக்கும்
மேலும், பூவின் இரசாத்தால் அப்பிரகம் சுத்தியாகும்.(தேரையர் கரிசல்)
மரப்பட்டை:
அகத்தி மரப்பட்டையை குடிநீர் விதிப்படி குடிநீர் செய்து கொடுக்க அம்மைக் காய்ச்சல், நஞ்சு சுரங்கள் நீங்கும்.
வேர்ப்பட்டையின் குணம்:
நல்லகத்தி வேரதனை நாடுங்கால் மேகமெனும்
சொல்லகலுந் தாகமறும் தோகையே!-மெல்லமெல்ல
மெய்யெரிவு கையெரிவு மேகனத்தி னுள்ளெரிவும்
ஐயெரிவும் போமென் றறி.
- அகத்தியர் குணவாகடம்.
பொருள்:
அகத்தி வேர்ப்பட்டையை, விதிப்படி ஊறல் அல்லது குடிநீராக செய்து உட்கொள்ள மேகம், நீர்வேட்கை, உடலெரிவு, கை எரிவு, ஆண்குறியினுள் எரிவு, ஐம்பொறிகளைச் சேர்ந்த எரிவு ஆகியவைகளைப் போக்கும்.
செவ்வகத்தி வேர்ப்பட்டை, ஊமத்தன் வேர் இரண்டையும் ஓர் அளவாக எடுத்து அரைத்து, வாதவீக்கத்திற்கும், கீல்வாயுக்களுக்கும் பற்றிடலாம்.

Other references:
The tender leaves, green fruit, and flowers are eaten alone as a vegetable or mixed into curries or salads. Flowers may be dipped in batter and fried in butter. Tender portions serve as cattle fodder, (overeating is said to cause diarrhea). Ripe pods apparently are not eaten. The inner bark can serve as fiber and the white, soft wood not too durable, can be used for cork. The wood is used, like bamboo, in Asian construction. The tree is grown as an ornamental shade tree, and for reforestation. In Java, the tree is extensively used as a pulp source. A gum resembling kino (called katurai), fresh when red, nearly black after exposure, exudes from wounds. This astringent gum is partially soluble in water and in alcohol, but applied to fishing cord, it makes it more durable. Pepper vines (Piper nigrum) are sometimes grown on and in the shade of the agati. According to NAS (1980a), this small tree produces firewood, forage, pulp and paper, food, and green manure and appears to hold promise for reforesting eroded and grassy wastelands throughout the tropics. It combines well with agriculture (agroforestry) in areas where trees are not normally grown and becomes an important fuelwood source. Dried and powdered bark is used as a cosmetic in Java. Allen and Allen enumerated three undesirable features (1) short lived (2) shallow-rooted and subject to wind throw, and (3) prolific seeder, the pods often considered a litter. An aqueous extract of bark is said to be toxic to cockroaches.
Folk Medicine



Resorted to be aperient, diuretic, emetic, emmenagogue, febrifuge, laxative, and tonic, agati is a folk remedy for bruises, catarrh, dysentery, eyes, fevers, headaches, smallpox, sores, sorethroat, and stomatitis (Duke and Wain, 1981). Bark, leaves, gums, and flowers are considered medicinal. The astringent bark was used in treating smallpox and other eruptive fevers. The juice from the flowers is used to treat headache, head congestion, or stuffy nose. As a snuff, the juice is supposed to clear the nasal sinuses. Leaves are poulticed onto bruises. Rheumatic swellings are poulticed or rubbed with aqueous decoctions of the powdered roots of the red-flowered variant. In India the flowers are sacred to Siva, representing both the male and female sex organs; still I find no mention of their use as aphrodisiacs. Ayurvedics, believing the fruits to be alexeteric, laxative, and intellectually stimulating, prescribe them for anemia, bronchitis, fever, pain, thirst, and tumors; the flowers, apertif and refrigerant, for biliousness, bronchitis, gout, nyctalopia, ozoena, and quartan fever; the root for inflammation, the bark as astringent; leaves, alexeteric, anthelmintic, for epilepsy, gout, itch, leprosy, nyctalopia, and ophthalmia. Yunani consider the tonic leaves useful in biliousness, fever, and nyctalopia. Indians apply the roots in rheumatism, the juice of the leaves and flowers for headache and nasal catarrh. Mixed with stramonium and pasted, the root is poulticed onto painful swellings. In Amboina, flower juice is squeezed into the eye to correct dim vision. The bark is used in infusions for smallpox. Cambodians consider the flowers emollient and laxative, the bark for diarrhea, dysentery, and paludism. Malayans apply crushed leaves to sprains and contusions. They gargle with the leaf juice to cleanse the mouth and throat. In small doses, the bark is used for dysentery and sprue, in large doses, laxative, in still larger doses, emetic. Pounded bark is applied to scabies. Philippines use the pounded bark for hemoptysis. The powdered bark is also recommended for ulcers of the mouth and alimentary canal. In Java, the bark is used for thrush and infantile disorders of the stomach. Leaves are chewed to disinfect the mouth and throat.
Per 100 g, the leaf is reported to contain 73.1 g H2O, 8.4 g protein, 1.4 g fat, 11.8 g NFE, 2.2 g fiber, 3.1 g ash, 1,130 mg Ca, 80 mg P, 3.9 mg Fe, 9,000 IU vit. A, 0.21 mg thiamine, 0.09 mg riboflavin, 1.2 mg niacin, and 169 mg ascorbic acid. Leaves contain (ZMB) per 100 g, 321 calories, 36.3 g protein, 7.5 g fat, 47.1 g carbohydrate, 9.2 g fiber, 9.2 g ash, 1684 mg Ca, 258 mg P, 21 mg Na, 2,005 mg K, 25,679 mg b-carotene equivalent, 1.00 mg thiamine, 1.04 mg riboflavin, 9.17 mg niacin and 242 mg ascorbic acid. The flowers (ZMB) contain per 100 g, 345 calories, 14.5 g protein, 3.6 g fat, 77.3 g carbohydrate, 10.9 g fiber, 4.5 g ash, 145 mg Ca, 290 mg P, 5.4 mg Fe, 291 mg Na, 1,400 mg K, 636 mg b-carotene equivalent, 0.91 mg thiamine, 0.72 mg riboflavin, 14.54 mg niacin, and 473 mg ascorbic acid. Seeds (ZMB) contain 36.5% CP, 7.4% fat, 51.6% total carbohydrate, and 4.5% ash. The seed oil contains 12.3% palmitic, 5.2% stearic, 26.2% oleic, and 53.4% linoleic acids. The seed testa, which constitutes 20% of the seed, contains 5.2% moisture, 1.3% ash, 0.8% fat, 2.7% CF, 0.1% free reducing sugars, 1.4% sucrose, 2.8% nitrogen, 6.3% pentosans, and 65.4% carbohydrates. Yields of 33% galactomannans are reported for alkali extraction of the testae. Seeds allowed to germinate (sprouts) for 120 hours increased vit. C content from 17–166 mg/100 g. Extracellular invertase of Rhizobia japonicum and its role in free sugar metabolism in the developing root nodules was studied. The enzyme hydrolyzed sucrose extracellularly, and its release was substrate inducible. 0.1 m b-mercaptoethanol released the cell-bound form of this enzyme. The production of invertase was low when glucose, galactose, mannose, fructose, and farrinose were used as carbon sources in the growth medium. In the developing nodules sucrose was the major sugar. The content of fructose was low in comparison with that of glucose, suggesting that in the nodules the fructose is converted to glucose prior to its entry into the bacterial cell. The content of glucose synchronized with the pattern of change in the activity of invertase in the nodules (Singh et al, 1980).
A small erect quick-growing short-lived soft-wooded tree to 10 m tall, 25 cm DBH, sparsely branched. Bole straight and cylindrical, the wood white and soft. Bark light gray, corky, deeply furrowed. Leaves pinnate, 15–30 cm long, with 16–30 pairs of linear oblong leaflets. Racemes 2.5 cm long. Flowers 2–4, white to pink, pendulous the corolla 7–9 cm long. Pods 50–60 cm long.
Reported from the Indochina-Indonesia Center of Diversity, agati, or cvs thereof, is reported to tolerate drought, heavy soils, poor soil, and water-logging. Widely cultivated as ornamental or curio vegetable in tropical Asia. (2n = 14, 24).
Native to many Asian countries, e.g., India, Malaysia, Indonesia, and the Philippines from sea level to 800 m, agati commonly grows on dikes between rice paddies, along roadsides, and in backyard vegetable gardens. It has been widely distributed in southern Florida and the West Indies and from southern Mexico through most countries of Central America down to South America. Cultivated in Mauritius (NAS, 1980a).
Apparently frost-sensitive, this species seems limited to the tropics. Ranging from Tropical Dry through Tropical Moist Forest Life Zones, agati is reported to tolerate annual precipitation of 4.8 to 22.5 dm (mean of 11 cases = 15.1), annual temperature of 24.3 to 26.7°C (mean of 8 cases = 25.6), and pH of 6.6 to 8.5.
Propagated readily by seeding or cuttings, requiring little maintenance. It has been aerially seeded, apparently with success. For reforestation, Mendoza (1980) recommends spacing cuttings ca 1 m long at 4 x 4 m. The saplings could serve as a nurse crop for mahogany, Banquet pine, etc. Cuttings should be set out at the beginning of the rainy season. When grown as shade plant for coconut seedlings, agati is sown in India in June and July, putting 3–4 seed per hole in a narrow channel, 30 cm x 30 cm, ca 1 m from the coconut seedlings.
When cultivated for fodder, agati is usually cut when ca 1 m tall. Indonesian foresters, growing the species for fuelwood, harvest on a 5-year rotation. One hectare can yield three m3 of stacked fuelwood in a 2-year rotation. After the plant is harvested, shoots resprout with such vigor that they seem irrepressible. The tree's outstanding quality is its rapid growth rate, particularly during its first 3 or 4 years (NAS, 1980a).
Planted at 90 cm intervals, an agati plant yields 4.5–9.1 kg lvs/yr, which translates to ca 12,000 plants per hectare yielding 50–100 MT leaves per year per hectare (C.S.I.R., 1948–1976), about 75% of which is water, suggesting DM yields of 12–25 MTha. Javanese have obtained 55 MT green matter per ha in 6–7 months. On a black, poorly structured clay, pH 8.5, in Australia, agati outgrew all other species tested, attaining 4.3–5.5 (-8.3) m in one year's growth.
Long been used as firewood in Southeast Asia, has been planted in several areas in Indonesia to provide fuel and other products in "turinisation" projects (after turi, the indigenous name). However, the wood is white, soft, and has a rather low specific gravity of about 0.42, which is poor for fuelwood. Wood yields of 20–25 m3 per ha per year are commonly achieved in plantations in Indonesia. Even when planted only along the edges of agricultural fields, as in Java, yields of 3 m3 of stacked firewood per ha from 2-year rotation periods have been recorded. The wood weighs 512 kg m3. Charcoal is used for gunpowder (C.S.I.R., 1948–1976). If 25 MT of dry leaves are available, then certainly there must be 5–10 MT stem as well, all of which could be diverted to energy.
Described as very susceptible to nematodes, agati is said to have been damaged by birds and grasshoppers in northern Australia. Colletotrichum capsici causes seedling blight, forming elongated or oblong cankers on the collar region of affected seedlings. The cankers, controlled with a Bordeaux spray, have black bristle-like tufts of setae. Nematodes include Heterodera trifolii and Meloidogyne sp. (Golden, p.c. 1984). Cercospora sesbaniae infects agathi. The Drosophilid fly Protostegana lateralis is a serious pest in Tamil Nadu. The maggots bore into the tender shoots of mature plants causing a gradual wilting of affected parts. The weevil Alcidodes buko causes serious damage to young crop both in adult and larval stage. It bites holes through leaves and bores the stem causing gall-like swellings DDT (0.05%) and BHC dust (5%) are cheap and effective; Product 1250 and Parathion are also effective against the grub. The larvae of Azygophleps scalaris tunnel through the stem and eat the contents leaving only the epidermis. The plant becomes weak and breaks off at the slightest jerk. Uprooting the stumps immediately after harvesting and burning them may prove effective means of control. Otinotus oneratus, the common 'tree hopper' infests agati from July to February (C.S.I.R., 1948–1976). Sesbania seedlings are highly receptive to infection by their homologous rhizobia, but different species have restricted susceptibility profiles. Sesbania rhizobia have a rather restricted host range. Rhizobia from alfalfa, clover, lupines, peas, soybeans failed to nodulate Sesbania species and vice versa.
References
C.S.I.R. (Council of Scientific and Industrial Research). 1948–1976. The wealth of India. 11 vols. New Delhi.
Duke, J.A. and Wain, K.K. 1981. Medicinal plants of the world. Computer index with more than 85,000 entries. 3 vols.
Mendoza, V.B. 1980. Katurai: a plant of many uses. Canopy International (Aug. 1980):12–13.
N.A.S. 1980a. Firewood crops. Shrub and tree species for energy production. National Academy of Sciences, Washington, DC.
Singh, R., Sidhu, P.S., Vadhera, S., Sital, J.S., Bhatia, S. 1980. Extra-cellular invertase of Rhizobium japonicum and its role in free sugar metabolism in the developing root nodules of Sesbania grandiflora. Physiologia Plantarum 48(4):504–508.

Thursday, February 8, 2007

Prameha Disease - A Paradigm shift

Update on Prameha -CME Programme
Sagarlal Memorial Hospital
Musheerabad,
Hyderabad




Please visit http://yuktihealth.4mg.com

LIST OF EQUIVALENT SCIENTIFIC TERMS USED IN SIDDHA MEDICINE

Abdomen - வயிறு
Abdominal Cavity - வயிற்றறை
Afferent - அநுவாக
Air (Commplemental) - பூரணவாயு
Air(Residual) - அவசிஷ்டவாயு
Alimentary canal - அன்னபாதை
Alveoli - காவடம்
Anatomy - அங்கவியூகம்
Ankle - கணைக்கால்
Anus - அபானம்
Antiseptics - பூதினாசகம்
Antitoxin - விஷத்ராயிகம்
Aorta - மூலதமனி
Appendix(Vermiform) - உபாங்கம்
Aqueous humour - வனம்
Armpit - அக்குள்
Artery - தமனி
Articulation - பொருத்தம், அசைவு
Artificial respiration - உபாயசுவாசமுறை, செயற்கைசுவாசமுறை
Asphyxia - மூச்சடைப்பு
Atlas(Bone) - மேருமனி
Auricle(Heart) - சிரவம்
Axis bone - கண்டமணி

B sries will be continued...........