மடியில் பூத்து...மருத்துவக்கொடிகளில் கோர்த்து...
சாமியிடம் சமர்ப்பிக்கப்பட்ட,
எங்கள் ஷாரன் பாப்பா.
அனுபவமிக்க மருத்துவரிடம்
ஆலோசனை,
மகப்பேறு...
கைராசி மருத்துவரின்
கண்காணிப்பு
இருந்தும்
எங்கு நடந்தது தப்பு?
எப்படி எகிறியதுஉப்பு?
அம்மா
வயிற்றைத்
துளைத்தெடுத்த
ஐந்து
மீயொலிப்படங்கள்!
சல்லடைபோட்டுச்
சலித்தெடுத்த
டாப்ளர் கதிர்கள்
என்ன பயன்?
கருவிகளில்
மின்சாரத்துடன்
மூளையும் பாயவேண்டுமே !
"நீர் குறைந்த மாதிரி இருக்கு"
என்பதற்கும்
குறைந்துபோன
பனிநீருக்கும்
என்ன வித்தியாசம்
இப்பொழுது
உணர்ந்துள்ளோம்.
தாத்தா...மூத்த மருத்துவர்
பாட்டி...மூத்த செவிலித்தாய்
அப்பா...ஆராய்ச்சி மருத்துவர்
அம்மா...முடநீக்கியல் மருத்துவர்
மாமா...பல் மருத்துவர்
அத்தை...பல் மருத்துவர்
எப்படிஇழந்தோம் உன்னை?
என
வெட்கத்தில்
புலம்பிய
தாய்மைக்கான
எச்சரிக்கைக்
கிறுக்கல்கள்.
நடைபாதை
பிச்சைக்காரியிடம்
டிஜிடாக்சின்
கண்டது போல்
ஆதிவாசிகளிடம்
இனி
மகப்பேறு கற்றுக்கொள்வோம்!!
ஏனென்றல்
அங்குதான்
குழந்தை இறப்புவிகிதம்
குறைவு!!
உச்சி வகிடெடுத்து
உதட்டுச்சாயம் பூசி
கண்ணில் மைதீட்டி
கண்ணத்தில்புள்ளி வைத்து
உன்கைபிடித்து
நடந்து சென்றேன்
கற்பனையில்
சில நாள்
இனி உனக்குப்பயமேயில்லை
எல்லாம் சாமிபார்த்துக்கொள்ளும்
அங்கு...
எல்.கே.ஜி. போட்டியில்லை
புத்தகச் சுமையில்லை
ஊசி பயமில்லை
கொசுவர்த்திப் புகையில்லை
குளோரின் நீரில்லை
கரியமிலக் காற்றில்லை
ஓசோன் ஓட்டையில்லை
எய்ட்ஸ் எமனில்லை
நிமிட்ஸ் கதிரில்லை
சாமி மட்டுந்தான்.
சிறுநீர் குழாய்க்கும்
இரைப்பைக்கும்வித்தியாசம்
தெரியாத
அறுவை மருத்துவக்குழுக்கள்!!
விலையுயர்ந்தகருவிகளை
விலைக்குவாங்கலாம்
ஆனால்...
சிறந்த மருத்துவர்கள்...?
உருவாக வேண்டும் !
இங்கோ...
ஒப்பந்தத்தில்
வாங்கப்படுகிறார்கள்!
இந்தியா
மருத்துவத்துறையில்
இன்னும்
கத்துக்குட்டிதான்!
ஷாரன் பாப்பா...
உனையிழந்து...
நான்
அம்மா
இந்த மருத்துவர்கள்
இந்த மக்கள்
இந்த சமுதாயம்
மீண்டும்
ஒருமுறை
விழித்துக் கொள்கிறோம்.
- Appa, Amma, Sam and Our Relatives