Monday, July 30, 2007

Thatcha Naayanaar Tamil Medical Dictionary - தட்சநாயனார் தொகுத்து அளித்த மருத்துவ அட்டவணை - "கு" வரிசை

குகுலா - கடுகுரோகணி
குருவிந்தம் - கோரைக்கிழங்கு
குக்கிலம் - அதிவிடையம்
குக்குடம் - கோழி
குக்குலு - குங்கிலியம்
குங்கிலியம் - வாலுளுவை
குங்குமப்பூ - சீமை மஞ்சள் பூ
குங்குமம் - இரத்தம், குங்குமப்பூ
குங்குலு - குங்கிலியம்
குசகம் - கணுப்புல்
குசந்தனம் - செஞ்சந்தனம்
குசம் - தருப்பைப்புல்
குசாடு - தருப்பைப்புல்
குசுமம் - பூ
குசேசயம் - தாமரை
குசை - நாணல்
குச்சகம் - நாணல்
குச்சத்தின்பாதி- சிறுபுள்ளடி
குச்சபாதி - சிறுபுள்ளடி
குச்சகம் - குன்றி
குச்சக்குப்பம் - காசா
குஞ்சடிகம் - வேலிப்பருத்தி
குஞ்சம் - குன்றி, தந்தம், புளி, நறளை, மருள்
குஞ்சரம் - கருங்குவளை, யானை
குன்சராசனம் - அரசு
குஞ்சி - சாடி
குஞ்சுரம் - குன்றிமணி
குஞ்செத்தம் - புன்னை
குடகரம் - உத்தாமணி
குடக்கினி - கருங்காலி
குடசம் - கிரிமல்லி, வெட்பாலையரிசி
குடப்பம் - இலுப்பை
குடப்பாலை - கறிப்பாலை
குடம் - பசு, வெல்லக்கட்டி
குடம்பை - முட்டை
குடவளப்பம் - இலுப்பை
குடான் - செம்முள்ளி
குடிஞை - ஆந்தை, கூகை
குடு - கள்குடை - வேல்
குடைவேல் - உடைவேல்
குட்டம் - கோட்டம்
குட்டியிடுக்கி - கோடைக்கிழங்கு, சித்தரத்தை
குட்டினம் - கருஞ்சீரகம்
குணபலம் - அதிவிடையம்
குணவி - சீந்தில்
குணனம் - பெருமருந்து
குண்டலதி - சங்கஞ்செடி
குண்டலி - இசங்கு, சீந்தில்
குதம் - வெங்காயம்
குதானன் - தாளி
குதிரை - ஊர்க்குருவி, மாமரம்
குதும்பகர் - தும்பை
குத்தம் - குதிரைவாலி, குவளை
குத்தரசம் - பெருங்காயம்
குத்தாமா - கோடகசாலை
குத்தாலர் - கடுகுரோகணி
குத்திரம் - சணல்
குத்துக்கால்சம்மட்டி - கீரைப்பூண்டு
குந்தம் - குங்கிலியம், குருந்து, பாடாணம்
குந்தி - கள்
குந்திராஞ்சம் - முந்திரிகைக்கொத்து
குந்திருக்கம் - குந்திரிகம், பறங்கிச்சாம்பிராணி
குபசுபர் - எட்டி
குபையம் - சிறுபுள்ளடி
குப்புருடன் - தசநாடியிலொன்று
குப்பை - கூகைநீறு, சதகுப்பை
குமரி - கற்றாழை
குமரிவேர் - சத்திசாரணைவேர்
குமாகு - பேய்ச்சுரை
குமிகை - எள், நல்லெண்ணெய்
குமிழ் - கூம்பல்
குமுதம் - ஆம்பல், திரண்டவெண்நெய்தல், நெய்தல்
கும்பஞ்சான் - சிவதை
கும்புள் - காடை
குயக்காலம் - நிலக்கடம்பு
குயத்தினலிகை - நிலவாகை
குயபீசகம் - எட்டி
குயம் - முலை
குயில்மொழி - அதிமதுரம்
குய்யபீசகம் - எட்டி
குரமடம் - பெருங்காயம்
குரம் - பாகல், விலங்கின் குளம்பு
குரல் - பாதிரிகுரவகம் - வாடாமரம், வாடாக்குறிஞ்சி
குரவத்தொக்கு - குராய்த்தோல்
குரவம் - தோஷம்
குரவாம் - குறிஞ்சா
குரிமல்லி - குடசப்பாலை
குருகு - குருக்கத்தி, கோழி, நாரை
குருகுதி - தவசிமுருங்கை
குருதி - உதிரம், மூளை
குருது - நெட்டி, நெய்
குரும்பை - புத்தான்சோறு
குருவகம் - பொடுதலைக்காய்
குருவிச்சி - பேராமுட்டி
குருவிச்சி - தேங்காய்ப்பாளை
குருவிந்தம் - குன்றிக்கொடி, கோரைக்கிழங்கு, முத்தக்காசு
குருவுட்டாகம் - பண்ணை
குருவேர் - வெட்டிவேர்
குலகாயம் - பேய்ப்புடோல்
குலகாலம் - நிலக்கடம்பு
குலகாளம் - கைப்பு
குலசுவேதன் - சவரிலோத்திரம்
குலதுருமம் - வெடியுப்பு
குலத்தம் - காணம், கொள்
குலம்பா - பேய்ச்சுரை
குலவலி - இலந்தை
குலவுகாசம் - நாணல்
குலவுரி - இருசந்தனம்
குலவுரிசந்தனம் - செஞ்சந்தனம்
குலாங்கு - காவட்டம்புல்
குலாங்குலி - காவட்டம்புல்
குலாதனி - கடுகுரோகணி
குலிகம் - இலுப்பை
குலிங்கம் - சாதிலிங்கம்
குலிசம் - வாழை
குலுத்தம் - கொள்
குலுத்தாயூசா - கொள்ளுக்கஞ்சி
குலோடி - துத்தநாகம், நாபி
குல்லை - கஞ்சங்கோரை, துளசி, வெட்சி
குவலயம் - கருங்குவளை, நெய்தற்கிழங்கு
குவலையம் - நெய்தல்குவரி
குண்டம் - வாலுளுவை
குவளை - வில்லை (வில்வம்)
குவாதம் - கஷாயம்
குழஞ்சாரம் - நாணல்
குழிமீட்டாள் - சாணங்கிப்பூண்டு, நத்தைச்சூரி
குழை - நெய்தல்
குளபயம் - சிறுபுள்ளடி
குளப்பாலை - ஊசிப்பாலை
குளம் - கருப்புட்டி, சருக்கரை, வெல்லம்
குளவி - காட்டுமல்லிகை, சதுரக்கள்ளி
குளவிந்தம் - மஞ்சள்
குளிர்தாமரை - ஆகாசத்தாமரை
குறிஞ்சனம் - வெங்காரம்
குறிஞ்சி - கழுதை, செம்முள்ளி
குறிஞ்சிமியான் - பல், முதலைப்பல்
குறுக்குவதூமம் - ஒட்டறை
குறுந்தொட்டி - சிறுகாஞ்சொறி
சிற்றாமுட்டி - சேவகன் பூண்டு
குறும்புள் - காடை
குற்குறு - குங்கிலியம்
குற்பகம் - நாணல்
குனட்டம் - அதிவிடையம்
குன்றி - மனோசிலை
குன்றுமேல் குறிஞ்சி எலும்பு - கழுதை எலும்பு
குன்னம் - பெருமருந்து

3 comments:

babu said...

dear sir
please help me in getting the botanical names of the following
1.jothi virutcham
2.jadai virutcham
3.roma virutcham
4.saya virutcham
5.jeeva kenthi
6.eru singi
7.kundalam palai
8.senthadu pavai
9.illai yuthira maram
10.mudavatukal
11.thalai vanagi
12.malaimulungi
13.pon vanna sali
14.sem bootha virutcham
15.karumbootha virutcham
16.mundaga virutcham
17.jothi virutcham
18.senthirai
19.sunagi virutcham
20.kullathondai
21.moovilai kurunthu
22.sarala devatharu
23.naga nanda virutcham
24,kana erumai virutcham
25.indira neelam
26.sivantha thilai
27.nilam purandi
28.sivantha thillai
29.sarkarai kovai
30.sarkarai vembu
31.pai thethan
32.jothi pul
33indira neelam
hope you will reply me these are kollimalai herbs and trees
awaiting your reply.
regards
d g babu
sivakasi.
1.ஜோதி விருட்சம்
2.ஜடை விருட்சம்
3.ரோம விருட்சம்
4.சாயா விருட்சம்
5.முண் டக விருட்சம்
6.குண்டல பாலை
7.ஜீவ கந்தி
8.செந்தாடு பாவை
9.இந்திர நீலம்
10.இலை உதிரா மரம்
11.முடவாட்டு கால்
12.பொன் வண்ண சாலி
13.தலை வணங்கி
14.மலை முழுங்கி
15.செந் திராய்
16.செம் பூத விருட்சம்
17.கரும் பூத விருட்சம்
18.குழல் ஆதொண்டை
19.சுணங்கன் விருட்சம்
20.மூவிலை குருந்து
21.சரள தேவதாரு
22.நாக நந்த விருட்சம்
23.கண எருமை விருட்சம்
24.சிவந்த தில்லை
25.சோதி புல்
26.சர்க்கரைவேம்பு
27.சர்க்கரை கோவை
28.நிலம் புரண்டி
29.பேய் தேத்தான்
30.பேய் கடலை
31.கத்திமடக்கி
32.இணை யாடி
33.மூங்கிலோட்டு
34.கல் சேம்பு
35.கல் தாமரை
36.திருமண ஜோதி
37. க்ஷர கந்தம்(shara kantham

Vasiyam said...

All types of herbal available R's 4000/-9787727029

Unknown said...

Want senthadu pavai. 94439 55161