கிகினி - கருவிளை
கிக்கசி - துத்திவிதை
கிக்கபோதமலம் - மாடப்புறாவெச்சம்
கிக்கிசா - துத்திவிரை
கி(சி)ஞ்சம் - புளியமரம்
கிஞ்சலம் - தாமரைக்கிழங்கு
கிஞ்சி - முதலி, வேம்பு
கிஞ்சுகம் - பலாசு, முருக்கு
கிட்டணம் - திரிபலை
கிட்டம் - சிட்டம்
கிட்டிணம் - திப்பிலி
கிட்டியம் - கிட்டம்
கிட்டிரம் - நெரிஞ்சில்
கிட்டுக்காய் - பாவட்டங்காய்
கிந்திகம் - திப்பிலிமூலம்
கிரகதூமம் - ஒட்டறை
கிரந்தி - கச்சோலம்
கிரந்திகம் - திப்பிலிமூலம்
கிரமிச்சம் - அனிச்சை, நாகமல்லி
கிரமுகம் - கமுகு
கிரவாணம் - தாளிசபலம்
கிராகதி - நிலவேம்பு
கிராமாது - கழுதைமூத்திரம்
கிரிகன்னி - வெள்ளைக்காக்கணம்
கிரிகாயம் - இரும்பு
கிரிசனம் - இருசீரகம்
கிரிச்சரீடம் - சாதிக்காய்
கிரிமல்லி - குடசப்பாலை, வெட்பாலை
கிரிமி - புழு
கிரிமிக்குன்றம் - வாலுழுவை
கிரீடம் - உத்தாமணி
கிரீட்டி - பிரண்டை
கிருடக்கொடி - தலைச்சுருளி
கிருட்டிணதிலம் - எள்
கிருட்டிணபாணம் - எட்டி
கிருட்டிணசீரகம் - கருஞ்சீரகம்
கிருட்டிணமூலி - துளசி
கிருட்டிணவல்லி - சிறுநன்னாரி
கிருதம் - நெய்
கிருதுவேதன் - பீர்க்கு
கிருமிக்குன்றம் - வாலுளுவை
கிருமிசத்துருவிரை - புரசம்விரை
கிரேசமாம் - பச்சைக்கற்பூரம்
கிரேந்தி - கச்சோலம்
கிழவி - முருங்கை
கிளவரி - தண்ணீர்விட்டான்
கிளிமுகன் - கற்றாழை
கிளை - மூங்கில், வாலுளுவை
கிறநாடை - ஈர உள்ளி
கிறாகி - வறுத்தல்
கிறுகொடி - தலைச்சுருளி
கிறுசன் - குங்குமப்பூ, மஞ்சள்
கிறுதம் - செம்முருங்கை
கிறுத்துவம் - அகில்
கிறுவேளி - பீர்க்கு
கினமுகிதி - கச்சோலம்
கினிதி - கிலுகிலுப்பை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment