Tuesday, May 29, 2007

Thatcha Naayanaar Tamil Medical Dictionary - தட்சநாயனார் தொகுத்து அளித்த மருத்துவ அட்டவணை - "இ" வரிசை

இகசுக்கு - நீர்முள்ளி
இகலன் - நரி
இகலி - மருந்து, சாரை, வெல்லம்
இகுளி - கொன்றை
இக்கு - கரும்பு, கள்
இக்குரசம் - கருப்பஞ்சாறு
இக்குரபீசம் - நீர்முள்ளிவிரை
இக்குரம் - நீர்முள்ளி
இங்கு - பெருங்காயம்
இங்குசுக்கண்டான் - நெரிஞ்சில், நீர்முள்ளி, பெருங்கரும்பு
இங்குதாரி - பேரோசனை
இங்குதாழி - பீதரோகணி
இங்குமம் - பெருங்காயம்
இங்குலிகம் - சாதிலிங்கம், சிவப்பு
இசுதாரு - கடம்பு
இசைமூடி - சிலந்திநாயகம்
இச்சியல் - கடுகுரோகணி
இஞ்சி - கொத்தான், மதில்
இடங்கனம் - வெண்காரம்
இடம்புரி - சங்கு
இடவகம் - பனம் பிசின்
இடவி - சிப்பி முத்து
இடற்சம் - குக்கில்
இடாடிமம் - தாதுமாதளை
இடுகாடு - சுடுகாடு
இடும்பன் - காரெலி
இடையல் - சீலை
இணர் - கிச்சிலிமரம்
இண்டஞ்செடி - ஈகைச்செடி
இண்டை - தாமரை, முல்லை
இதலை - கொப்புழ்
இதல் - கவுதாரி, காடை
இதழி - கொன்றை
இதள் - இரதம்
இதை - கலப்பை, காரமணி
இத்திநடையம் - நத்தை
இத்துரா - காவட்டம்புல்
இந்தம் - புளியமரம்
இந்தி - பூனை
இந்திரகாந்தம் - வாரி
இந்திரகோபம் - தம்பலபூச்சி
இந்திரசுகந்தம் - நன்னாரி
இந்திரபசுப்பி - வெந்தோன்றி
இந்திரயவம் - வெட்பாலையரிசி
இந்திரரேகை - வெட்பாலை
இந்திரவம் - கருங்குவளை
இந்திரவல்லி - கொத்தான்
இந்தீவரம் - கருநெய்தல்
இந்து - பசைக்கருப்பூரம்
இந்துரு - பெருச்சாளி
இந்துவோடிரவிகூடல் - அமாவாசை
இந்துழி - பெருங்காயம்
இந்துளம் - கடப்பமரம்
இந்துளி - பெருங்காயம்
இந்துள் - நெல்லி
இபகேசரம் - நாகப்பூ
இபங்கம் - புளிமா
இபம் - யானை, மரக்கொம்பு
இப்பி - சங்கு
இப்பை - சீலை, இலுப்பைமரம்
இமம் - சந்தனம், பனி
இமலம் - மரமஞ்சள்
இமில் - எருத்துத்திமில்
இயக்காக்கி - கழற்காய், கழற்கொடி
இயக்கத்தீர்க்கு - கழற்கொடி
இயல்பூதி - நாய்வேளை
இயவசுகம் - காட்டுமரை
இயவை - துவரை, தோரை, நெல், வழி
இயாசம் - கொன்றை
இயுசாவியம் - கொன்றை
இயைமே - வாழை
இரசதம் - வெள்ளி
இரசனா - அரத்தை
இரசனி - மஞ்சள்
இரசேந்திரம் - அப்பிரகம்
இரசோனகம் - உள்ளி
இரச்சை - கயிறு
இரட்சை - சுடுதல்
இரணி - பன்றிமொத்தை
இரணியகருப்பன் - பிரமன்
இரணியம் - பொன்
இரண்டுநிசி - மரமஞ்சள், மஞ்சள்
இரதகம் - இத்தி
இரதம் - பல்
இரதி - ஆசைப்பெருக்கம், இலந்தைமரம், இத்திமரம், பித்தளை, மன்மதன்றேவி, பெண்
இரத்தம் - உதிரம், சிவப்பு
இரத்தி - இத்திமரம், இலந்தை
இரத்திரி - இத்திமரம்
இரத்தோத்திரம் - புனல் முருங்கை
இரந்திரி - இத்தி, இரலி, இச்சிச்செடி, ஈரல், பதுக்கை
இரம்பம் - ஈர்வாள், கஸ்தூரி மிருகம்
இரம்பியம் - மிளகு
இரலி - கொன்றை, மருது, இத்தி
இரலை - அசுவதி, ஊதிடுகொம்பு, கலைமான், புல்வாய், மரை
இரவி - இச்சிச்செடி, எருக்கு
இரவேலி - பிரண்டை
இரளி - கொன்றை
இரள் - பதுக்கை
இராகவி - நெருஞ்சில்
இராகு - கரும்பாம்பு, கோமேதமணி
இராசசத்துரு - கொன்றை
இராசமரம் - நாகம்
இராசயுகம் - பாலை
இராசியம் - தாமரைப்பூ
இராசிலம் - சாரைப்பாம்பு
இராசினம் - அரத்தை
இராடம் - வெங்காயம்
இராட்டலோட்டம் - புத்தோடு
இராத்திரி - மஞ்சள்
இராத்திரியுக்மம் - இருமஞ்சள்
இராவடி - ஏலம், பேரேலம்
இராவறிவான் - கோழி, சேவல்
இரிஞ்சி - மகிழ்
இருகுரங்கின் கை - முசுமுசுக்கை
இருசம்பீரம் - எலுமிச்சை, நாரத்தை
இருசியல் - பசளை
இருசீரகம் - கருஞ்சீரகம், சீரகம்
இருசு - மூங்கில்
இருந்தை - கரி
இருபன்னியம் - சேங்கொட்டை
இருப்புலி - துவரை
இருப்பு - தாமரைப்பூ, சிறுதுரு, காந்தல்
இருமஞ்சள் - மரமஞ்சள், மஞ்சள்
இரும்பன் - காரெலி
இரும்பு - தாமரை
இரும்பை - குடம், பாம்பு
இருயில் - வங்கம்
இருவி - தினைத்தாள்
இருவேலி - குருவேரி, வெட்டிவேர்
இருளரிவான் - நெஞ்செலும்பு
இருளி - கருஞ்சீரகம்
இருள் - கறுப்பு, நரகம்
இரேயம் - கள்
இரைத்து - உப்பிலி
இலகு - அகில்
இலகுசம் - இலாமிச்சு
இலக்காரம் - சீலை
இலசதி - இலந்தை
இலசுனம் - உள்ளி
இலஞ்சி - குளம், தொப்புள்
இலட்சுமணம் - தாளி
இலட்டு - அப்பம்
இலட்டுகம் - அடை, தோசை
இலந்தை - நாரம், குளம்
இலவங்கம் - கிராம்பு
இலவணம் - இந்துப்பு, உப்பு, உவர்த்தல்
இலவுங்கப்பத்திரி - இலவுங்கயிலை
இலாக்கம் - அரக்கு
இலாங்கலம் - கலப்பை, செங்காந்தள், தென்னைமரம்
இலாங்கலி - செங்காந்தள், சேவனார்கிழங்கு, தெங்கு
இலாசை - பொரி
இலாடம் - புளியமரம்
இலாட்டு - குதிரைவாய்நுரை
இலாலாவின் இரதம் - வாய்நீர்
இலிகுசம் - எலுமிச்சை
இலிதி - பித்தி
இலுங்காலமம் - எலுமிச்சம்பழம்
இலேநறு - கல்லுப்பு
இலை - அப்பவர்க்கம், தாழை
இலைக்கொடி - வெற்றிலைக்கொடி
இல்லம் - தேற்றான்மரம், வீடு, தேற்றான்
இல்லி - வால்மிளகு, தேற்றானிலை
இவனம் - விளக்கு
இவுளி - குதிரை
இழுது - நெய், நிணம், தித்திப்பு
இளஞ்சூல் - ஈனாக்கதிர்
இளம்புல் - அறுகு
இளையிடுவாராது - கோடகசாலை
இறங்கர் - குடம்
இறடி - கருந்தினை
இறட்டி - கருந்தினை
இறலி - இத்திமரம்
இறால் - தேங்கூடு, தேன்
இறுங்கு - சோளம்
இறுங்கலியானிலை - கரிசலாங்கண்ணியிலை
இறுநாளகம் - இலாமிச்சை
இறும்பு - குறுங்காடு, தாமரை
இறைஞ்சி - நார்சீலை
இறைவனிம்பம் - சிவனார்வேம்பு
இற்புலி - பூனை
இற்று - இஃது
இனிமை - தித்திப்பு
இன்பூறல் - சாயவேர்
இன்னாலை - இலக்கள்ளி

No comments: