ஆ - அதிசயச்சொல், இரக்கச் சொல், வினாச்சொல், ஆச்சாமரம், பசுப்பொது, பெண் எருமை, பெண்மரை
ஆகாசகருடண் - புகையூரல்
ஆகாசத்தாமரை - கொட்டைப்பாக்கு, குளிர்த்தாமரை
ஆகாசமூலி - புகையூறல்
ஆகாரம் - உணவு, நெய், மனைப்பொது, வடிவு
ஆகிருநனந்தம் - புங்கு
ஆகு - எலி, கொப்புழ், தாமரை, பெருச்சாளி
ஆகுலி - ஆவிரை
ஆக்கம் - பொன்
ஆக்கியம் - நாமம்
ஆக்கிராணம் - மூக்குப்பொடி
ஆசவம் - கள்
ஆசாசி - கருடன், சீந்தில்
ஆசாடம் - ஆடிமாதம்
ஆசியம் - கருஞ்சீரகம்
ஆசினி - ஈரப்பலா
ஆசுகம் - சூதகம்
ஆசுவீசம் - ஐப்பசி மாதம்
ஆசை - பொன்
ஆச்சியம் - நெய்
ஆஞ்சி - அலையல், ஏலம்
ஆஞ்சில் - இசங்கு
ஆடகம் - துவரை, பொன்
ஆடகி - துவரை
ஆடகிபத்திரம் - துவரையிலை
ஆடுதின்னாப்பாளை - பாதாள மூலி
ஆட்சி - துவரை
ஆட்டாங்கோரை - முத்தக்காசு
ஆணி - எழுத்தாணிகள்
ஆண்டலை - கோழி
ஆண்மரம் - அகவயிரமுள்ளமரம்
ஆதம்பேதி - செப்புநெருஞ்சி
ஆதளை - காட்டாமணக்கு
ஆதிகம் - சிறுகுறிஞ்சான்
ஆதிபலம் - சாதிக்காய்
ஆதிரம் - நெய்
ஆதிருதி - இஞ்சி
ஆதுவம் - கள்
ஆதொண்டை - காற்றோட்டி
ஆத்திரதம் - இஞ்சி
ஆத்திரம் - இஞ்சி
ஆத்தும புத்தர் - பூனைக்காலி
ஆந்தை - புறாமுட்டி
ஆமயம் - கோஷ்டம்
ஆமரீகம் - நெல்லி
ஆமலகம் - நெல்லி, பளிங்கு
ஆமல் - மூங்கில், விஷமூங்கில்
ஆமா - காட்டுப்பசு
ஆமாகோளா - கற்கடகசிங்கி
ஆமிரம் - மாமரம்
ஆமிலம் - புளியமரம்
ஆமேற்பல்லூரி - கோரோசனை
ஆம்பலா - புளியாரை
ஆம்பல் - அல்லி, இசைக்குழல், மூங்கில், யானை, கள்
ஆம்பி - ஒலி, காளான்
ஆம்பியம் - இரதம்
ஆம்பிரகம் - அப்பிரகம்
ஆம்பீரபல்லவம் - மாங்கொழுந்து
ஆம்பு - காஞ்சொறி
ஆயமலர் - துவரை
ஆயாழனம் - பசுவின்மடி
ஆகாரம் - இரத்தம், சந்தனம், பித்தளை
ஆரக்கம் - அகில்
ஆரக்குவதம் - கொன்றை மரம்
ஆரம் - ஆத்திமரம், சந்தன மரம், பித்தளை, பூமாலை, முத்து, முத்துமாலை, திப்பிலி, அத்தி மரம், கோடகசாலை, சந்தனம்
ஆரகூடம் - பித்தளை
ஆரகூலம் - பித்தளை
ஆரல் - ஒரு மீன்
ஆரகவரியம் - அரசு
ஆரிட்டம் - கருஞ்சீரகம்
ஆருகதம் - நாவல்மரம்
ஆருபதம் - பித்தளை
ஆருமியாதன் பால் - கள்ளிப்பால்
ஆருவம் - நீர்
ஆரே - ஆத்தி
ஆரை - ஆத்திமரம், நீராரை
ஆர் - காட்டாத்தி, கொன்றை
ஆர்கோரம் - கொன்றை
ஆர்க்கலம் - பித்தளை
ஆர்க்குவதம் - கொன்றை
ஆர்பதம் - வண்டு
ஆலகாலம் - நஞ்சு
ஆலம் - ஆலமரம், நஞ்சு, நீர், புங்குமரம், மலர்ந்த பூ, மாவிலங்கு, ஈயம்
ஆலவிருட்சம் - ஆதொண்டை
ஆலாலம் - நஞ்சு
ஆலி - ஆலாங்கட்டி
ஆலுகம் - வில்வம்
ஆவர்த்தனி - சடைச்சி
ஆவம் - குங்குமம்
ஆவாலம் - வௌவால்
ஆவிபத்தம் - பேராமுட்டி
ஆழல் - கரையான்
ஆள்வணங்கி - அரசு
ஆனத்தேர் - விடத்தேர் செடி
ஆனந்தம் - அரத்தை
ஆனம் - அன்பு, குழம்பு
ஆனல் - கரையான்
ஆனனம் - முகம்
ஆனிலை - பசுக்கொட்டில்
ஆனைக்கன்று - அத்திப்பிஞ்சு, அத்தித்துளிர்
ஆனைக்காய் - அத்திக்காய்
ஆனைத்தடிச்சல் - புளிநரளை
ஆனைப்பிச்சான் - புளிநரளை
ஆனைவணங்கி - தேள்கொடுக்கிலை
ஆன் - பசுப்பொது, பசு
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Very good, Please post remaining list
- Dr. Bonday
Post a Comment