Tuesday, June 5, 2007

Thatcha Naayanaar Tamil Medical Dictionary - தட்சநாயனார் தொகுத்து அளித்த மருத்துவ அட்டவணை - "கா" வரிசை

கா - கக்கரிக்காய்
காககிஞ்சம் - மஞ்சிட்டி
காகதுண்டம் - அகில்
காகதேரி - மணித்தக்காளி
காகத்தூத்தி - காத்தொட்டி
காகமாசி - மணத்தக்காளி
காகம் - கீரி, கீரை
காகனம் - கருவிளை
காகித்திரன் - குறிஞ்சா
காகுகாசி - சிறியபுடோல்
காகுறட்டை - கறுப்புக்காக்கணம்
காகொடி - காஞ்சொறி, எட்டி
காகோடகி - வாலுளுவை
காகோளி - அசோகு, கொடி, அரசு, தேள்கொடுக்கு
காக்கம் - கோவை, காக்குரட்டை
காக்குறோட்டை - காக்குரட்டை
காக்கை - இரசம், சாறு
காங்கொளி - தேள், கொக்கு
காசறை - கஸ்தூரிமிரு
கம்காசா - நாணல்
காசி - சீரகம்
காசிகம் - கருஞ்சீரகம்
காசிரோத்தம் - வறட்சுண்டி
காசை - தண்டையாம்புல், காயநாணல், காசா
காஞ்சனம் - புங்கு, பொன்
காஞ்சனி - மஞ்சள்
காஞ்சிரம் - எட்டி
காஞ்சிரம்பழம் - எட்டிப்பழம்
காஞ்சு - பூநீறு
காடுகுடு - காணம்
காட்சிமரிப்பு - பெருங்குமிழ்
காட்டகத்தி - வீழி
காட்டணம் - பெருங்குமிழ்
காட்டம் - பெருங்குமிழ்
காட்டறி - கள்ளி
காட்டுக்கத்திரி - காவேளை, கொழுஞ்சி, சிறுவழுதலை, முள்ளிக்கத்திரி
காட்டுத்துவரை - இரும்புலி
காட்டுமஞ்சள் - கத்தூரிமஞ்சள்
காட்டுமுந்திரி - பிரண்டை, புளி, புளிநரளை, முல்லை
காட்டுவெள்ளி - பேய்க்கொம்மட்டி
காட்டெருமை - கள்ளி, காய்வேளை
காட்டெருமைப்பால் - எருக்கம்பால், கூகைநீறு
காணம் - கொள், பொற்
காசுகாண்டகம் - நிலவேம்பு
காண்டம் - சீந்தில், வஞ்சிமரம்
காதித்தம் - குறிஞ்சி
காதிரப்பயம் - கருங்காலிப்பிசின்
காத்திரம் - கீரி, பாம்பு
காத்தொட்டி - ஆதொண்டை
காந்தம் - ஊசிக்காந்தம்
காந்தள் - கலப்பைக்கிழங்கு, காந்துகம், சூரியகாந்திச்செடி, வெண்காந்தள், வெந்தொட்டி, வெந்தோன்றி
காந்தாரி - தசநாடியிலொன்று
காப்பான் - கையந்தகரை
காப்பு - திருநீறு
காம்பிரம் - முருக்கு
காமம் - அகில், ஆல்
காமரி - புளிநறளை
காமரீசம் - புல்லுருவி
கா(கர)மலம் - கழுதைலத்தி
காமன் - சிறுமூலம்
கா(கர)மூத்திரம் - கழுதைமூத்திரம்
காம்பசி - செப்புநெருஞ்சில்
காம்பவுசி - நெருஞ்சில்
காம்பிரம் - சாம்பிராணி
காம்பு - பாதிரி, பூசணி, மூங்கில்
காம்போகி - குன்றி
காயத்திரி - கருங்காலி
காயந்தணம் - நாய்வேளை
காயம் - பெருங்காயம், மிளகு, வெங்காயம்
காயாசுடகம் - நிழலில் உலர்த்தல்
காய்வேளை - கொழிஞ்சி
காரக்கொடி - பழுபாகல்
காரடம் - மருக்காரை
காரண்டம் - நீர்க்காக்கை
காரம் - அகத்தி
காரவல்லி - பாகல்
காரான் - எருமை
காரி - ஆவிரை, கரிக்குருவி, கள், காக்கை, நஞ்சு
காரிகோளி - முத்தக்காசு
காரிமை - கொடிவேலி
காரிரத்தம் - ஆடுதின்னாப்பாளை
காருணி - வானம்பாடி
காருராசி - நற்புடோல்
காரெள் - காட்டுஎள்
கார் - கருங்குரங்கு, சித்திரமூலம்
கார்கோளி - கருங்கொள், நிலப்பனை
கார்ப்பாசபீசம் - பருத்திவிரை
கார்ப்பாசம் - பருத்தி
கார்ப்பாசிதளம் - பருத்தியிலை
கார்மணி - கையந்தகரை
காலக்கையிலை - அத்தி, நீர்ப்பூலா
காலாயுதம் - கோழி
காலி - காட்டுமுருக்கு
காலேயம் - அகில்
காவகா - சேராங்கொட்டை
காவகர் - சேங்கொட்டை
காவற்கலி - வாழை
காவா - காட்டுமல்லிகை
காவி - கருங்குவளை
காவிளை - கொளிஞ்சி
காவேளை - கொழுஞ்சி
காளகண்டம் - குயில்
காளகம் - மருக்காரை
காளகன் - கழுதை
காளம் - எட்டி
காளி - கக்கரி
காளிகம் - மணித்தக்காளி
காளிங்கபத்திரம் - தும்மட்டியிலை
காளிதம் - மணித்தக்காளி
காளிந்தம் - ஏலம்
காளியம் - பளிங்கு
காளினியம் - கத்தரி
கானகம் - கருஞ்சீரகம்
கானக்குதிரை - மாமரம்
கானக்குறத்தி - தேன், முலைப்பால்
கானமுல்லை - காட்டுமுல்லை
கானமௌவல் - காட்டுமல்லிகை
கானவல்லி - குரங்கு
கானவிருக்கம் - பாதிரி
கானனுசாரி - நன்னாரிவேர்
காஸ்தமரியம் - குமிழ்

No comments: