Showing posts with label Medical Dictionary "ஏ" வரிசை. Show all posts
Showing posts with label Medical Dictionary "ஏ" வரிசை. Show all posts

Tuesday, May 29, 2007

Thatcha Naayanaar Tamil Medical Dictionary - தட்சநாயனார் தொகுத்து அளித்த மருத்துவ அட்டவணை - "ஏ" வரிசை

ஏகம் - திப்பிலி
ஏகவாசம் - ஆல்
ஏகாரவல்லி - பாகல்
ஏகுரதி - புறாமுட்டி
ஏடகம் - தென்னைமரம்
ஏடலகம் - அதிமதுரம்
ஏமநாமம் - ஊமத்தை
ஏம பத்திரம் - மலை அத்தி
ஏமமாட்சிகம் - பொன்னிமிளை
ஏமம் - பொன்
ஏமனாகம் - ஊமத்தை
ஏயம் - சந்தனம்
ஏயல் - எரல்
ஏரண்டம் - ஆமணக்கு
ஏரத்தை - பிடரிக்காம்பு
ஏருவை - கோரைக்கிழங்கு, செம்பு
ஏலம் - ஏலா
ஏலித்துளசி - சாணங்கி என்பது, குழிமீட்டான் பூண்டு
ஏலிப்பாகம் - காட்டாமணக்கு, எலியாமணக்கு, புல்லாமணக்கு
ஏலு - சங்கஞ்செடி
ஏவகுகள் - சவுக்காரம்
ஏவநங்கம் - அசமோதம்
ஏவாங்கம் - அசமதாகம்
ஏனக்கோடு - பன்றிக்கொம்பு
ஏனல் - நெற்கதிர், செந்தினை, தினையரிசி